சென்னையில் 20 தூதரக அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள 20 வெளிநாட்டு துணை தூதரகங்களுக்கும் நடிகர் அருண் விஜய் வீட்டுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், தூதரகங்கள் உட்பட பலவற்றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஜிபி அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்கம்பாக்கத்தில் […]
திருச்செந்தூரில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
திருச்செந்தூரில் பக்தர்கள் தங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது கடற்கரையில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை யாரும் தங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.தற்போது பௌர்ணமி அன்று கடற்கரையில் தங்கும் பழக்கம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது இதனை தடுக்க விதத்தில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது பக்தர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்!
கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள். இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
ரோடு ஷோ நடத்த புதிய நிபந்தனைகள்
அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ நடத்த புதிய நிபந்தனைகளை அரசு வெளியிட்டுள்ளது இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதன்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்றால் தான் ரோடு ஷோ நடத்த முடியும் மேலும் வரும் கூட்டத்திற்கு ஏற்ப டெபாசிட் ரூபாய் 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை கட்ட வேண்டும் 10 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் பேச 21 […]
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் மெட்ரோ கட்டுமான பணி
சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் 3 மெட்ரோ வழித்தடங்களில், மாதவரம்-சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., தூரத்துக்கு 46 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் மேம்பால பாதைக்காக 320-க்கும் மேற்பட்ட தூண்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ள இடங்களில், மேம்பாலம் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடத்தில், கிண்டி கத்திப்பாராவில் இருந்து 1,354 அடி தூரத்துக்கு மேம்பால பாதையில் பிரமாண்டமாக ரெயில் பாதை 101 […]
ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவார்! சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு!
ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம்
ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிக்கிறார். கமல்ஹாசன். சுந்தர்.சி இதனை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. வெளியாகி உள்ளது.பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக ‘அருணாச்சலம்’ படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி., 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார்.
அணு ஆயுதப் போட்டியில் அமெரிக்கா ,ரஷ்யா
ரஷ்யா வடகொரியா, பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன எனவே அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை நடத்தும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தினால் ரஷ்யாவும் மீண்டும் சோதனைகளை தொடங்கும். அதற்கான வரைவுத் திட்டங்களை தயார் செய்வோம் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார் இதனால் அணு ஆயுதப் போட்டி ஏற்பட்டுள்ளது
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 164க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகளிர் கிரிக்கெட் அணி
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது இதனைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. நேற்று உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்