டெல்லி கார்வெடிப்பு:
மோடி எச்சரிக்கை டெல்லியில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகுந்த மன வேதனையுடன் பூடான் வந்திருக்கிறேன். இச்சம்பவத்திற்கு சதித் திட்டம் தீட்டிய யாரும் தப்ப முடியாது; பொறுப்பான அனைவரும் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றுபூடானில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.
உஜ்ஜயினி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் தெலுங்கு நடிகை லீலாவும் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலிலிருந்த நந்தி சிலைக்கு இவர்கள் அபிஷேகம் செய்தனர். பின்னர், இவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் அவர்களை கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
ராஜபாளையம் கோவில் காவலாளிகளை கொன்று உண்டியல் கொள்ளை
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் இரவு நேர காவலாளிகள் இருவர், பகல் நேர காவலாளி ஒருவர் என 3 பேர் பணியில் உள்ளனர். நேற்று இரவு காவலாளிகள் பேச்சி முத்து(50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் பணியில் இருந்தனர். செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணி அளவில் பகல் நேர காவலாளி கோயிலுக்கு வந்தார். […]
பிரபல நடிகர் தர்மேந்திரா மரணம்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா(89) காலமானார். பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி நடிகை ஹேமமாலினி எம்பி ஆவார்.
ரீல்ஸ் போடுவதற்காக ரயிலில் குளித்த பயணி
ரயிலில் குளித்த பயணி ஒருவரை ரயில்வே துறை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு ரயிலில் பயணி ஒருவர் கழிப்பறைக்கு அருகில் நின்று வாளி மற்றும் குவளையுடன் சோப் போட்டு குளிப்பது போன்ற வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பலர் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்தனர். மேலும் பலர் அந்தப் பயணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் வீடியோவில் காணப்பட்ட அந்த நபரை அடையாளம் கண்டு அவர் […]
உ பி பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்
உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சர்தார் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் கோரக்பூரில் தேசிய ஒற்றுமை தின பேரணி நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்அறிவித்தார்.
தெலுங்கு படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன்.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது இந்த படம் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த “பகவந்த் கேசரி” இந்த படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலைக்கு 755 வது இடம்
கோவையில் இந்திய அயன் மேன் போட்டி நடந்தது இதில் அண்ணாமலை கலந்து கொண்டு நீச்சல் சைக்கிள் ஓட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டார் 805 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் அண்ணாமலைக்கு 755 ஆவது இடம் கிடைத்ததது.
டெல்ல்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்கு
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், தில்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா(UAPA) சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தில்லி காவல் துறையினர் […]
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்…
இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இதற்கு தேவையான விஷயங்கள். உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் உள்ள உங்கள் பெயருடன், voter ID உள்ள பெயரும் பொருந்தி இருந்தால், இணையதளம் வாயிலாக சுலபமாக முடித்து விடலாம். தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://voters.eci.gov.in/