பிரபல இந்தி நடிகர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இந்த நிலையில் மற்றொரு இந்திய நடிகரான கோவிந்தா மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் நினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

சினிமா கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான சிவாலய விருது வழங்கப்பட்டுள்ளது அவருக்கு சென்னையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் இந்த விருது வழங்கப்படும்.ஏற்கனவே தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் இந்த விருதை பெற்றுள்ளார்

2026 எப்படியிருக்கும் : பாபா வங்கா கணிப்பு!

உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை முன்கணித்து, அவற்றில் பல அப்படியே நடந்தும் இருப்பதால், பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பெண்ணின் கணிப்புகள் மீது பெரிய அளவில் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. சிறு வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்காவுக்கு, உலகில் நடக்கும் பல விஷயங்களை முன் கணிக்கும் ஆற்றல் கிடைத்தது. அவற்றை அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த நிலையில், கடந்த 1996ஆம் ஆண்டே பாபா வங்கா மரணம் அடைந்துவிட்ட போதும், அவரது கணிப்புகள் சாகா வரம் […]

8தேர்தல் கணிப்பினும் பாஜக கூட்டணி வெற்றி

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன .இந்த நிலையில் நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. எட்டு முக்கிய நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தல் கணிப்புகளில் அனைத்திலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.11,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.