டெல்லி குண்டுவெடிப்பு.

சிக்கிய சிவப்பு கார்டெல்லி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட் கார் ஹரியானாவில் சிக்கியது டெல்லி பதிவெண் கொண்ட காரை பறிமுதல் செய்து காவல்துறையினர், தடயவியல் துறையினர், தேசிய பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்

கோத்தகிரியில் கிணற்றுக்குள் பிணமாக கிடந்த புலி

நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட 20 அடி ஆழ கிணற்றுக்குள் புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனநாயகன் படம் தமிழக விற்பனை சிக்கல்

விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு ஏரியா உரிமையினையும் தனித்தனியாக வாங்கிவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழக உரிமையினை ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் தான் வழங்க வேண்டும் என்ற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழக உரிமை விற்பனையின் மூலம் சுமார் ரூ.100 கோடி வரை எதிர்பார்க்கிறது தயாரிப்பு நிறுவனம். தனித்தனியாக விற்பனை செய்தால் இந்தப் பணம் […]

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்த நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாய் உரிமையாளர் மீது வழக்கு

மதுரையில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை லேபர்டாக் இன நாய் கடித்தது. தட்டிகேட்ட மாணவியின் தாயாரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரில் நாய் உரிமையாளர் விஜய் சாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம்

கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் வரை, அதாவது நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை பத்மாவதி தாயார் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறுவாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையொட்டி, நேற்று வைகானச ஆகம விதிகளின்படி, கோயில் […]

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புள்ள தீவிரவாத இயக்கம்

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

வெற்றிகோப்பை சின்னம் கேட்டு த.வெ.க மனு

தமிழக சட்டப்​பேரவை தேர்தலில் போட்டி​யிட​வுள்ள தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்​கக்​கோரி, அக்கட்​சியின் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்​தனர். தவெக கொடுத்​துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் வெற்றி கோப்பை ,ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,800 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.