திருப்பரங்குன்றம் விவகாரம் சிவன் பார்த்துக் கொள்வார். மத்திய அமைச்சர் பேட்டி
திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இவ்வாறு அவர் கூறினார்
புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
1) காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். 2) அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. 3) மெரினா கடற்கரை உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து மூடப்படும். வாகனங்கள் நிறுத்த […]
பான் கார்டு – ஆதார் இணைப்பு இன்றே கடைசி நாள்
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்து உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும். இணைக்கத் தவறினால் PAN எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை எச்சரிக்கை.எடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் மோதல்.வி.சி.க. கம்யூனிஸ்டுமீது காங்கிரஸ் பாய்ச்சல்
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரின் பதிவு வருமாறு:- “VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிய செய்தி படித்தேன், இதுஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை […]
தமிழக சட்டசபை ஜனவரி 20 இல் கூடுகிறது
சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]
விளையாட்டு வீராங்கனை பி.வி சிந்துவுக்கு புதிய பதவி
உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யூஎப்) சார்பில் செயல்படும் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தவெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி
திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்…!!!
திருப்பதியில் அளவு கடந்த கூட்டம் காரணமாக நீண்ட கியூ வரிசையில் பக்தர்கள் புதிதாக நிற்பதற்கு நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. கூட்டத்தின் அளவை பொறுத்து நாளை காலை 6 மணிக்கு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுபவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை படி வரிசையில் கடைசியாக நிற்கும் நபர் 30 மணி நேரம் கழித்து தான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு […]
வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,03,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.254க்கும், ஒரு கிலோ ரூ.2,54,000க்கும் விற்பனை […]
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஜி.கே.மணி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் […]