பீகாரில் காங்கிரஸை ‘கை’ கழுவி, பாஜகவுக்கு கைகொடுத்த பெண்கள் ஓட்டு!

பீகார் சட்டசபை தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ஓட்டளித்தனர். மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது; இது ஆண்களைவிட (62.8%) 8.8 சதவீதம் அதிகம்; பீகாரின் தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும். வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும். இது என்டிஏ கூட்டணி தற்போது முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இ.ஸ்கூட்டர் வாங்க மானியம்

சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுஅறிவித்துள்ளது தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் இணையதளமான tnuwwb.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் மெட்ரோ , பேருந்து, மின்சார ரயிலில் முதல் முறை செல்ல ரூ.1 கட்டணம்

மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்க சென்னை ஒன் செயலியை அரசு தொடங்கியது ரூ.1க்கு பயணிக்கும் சலுகை இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. BHIM, Navi செயலிகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்துவோர் ரூ.1க்கு முதல்முறை மட்டும் செல்லலாம்.

சென்னையில் 9 இடங்களில் மின்சார கார் சார்ஜிங் நிலையம்

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டு உள்ளது பெசன்ட் நகர் கடற்கரை, அம்பத்தூர் மங்கள் ஏரி பூங்கா, தி.நகர் விளையாட்டு திடல், சோமசுந்தரம் பூங்கா வாகன நிறுத்துடம், செம்மொழி பூங்கா, மெரினா, அண்ணா நகர் போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வராவ் பூங்கா, அஷ்டலட்சுமி கோயில் வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் அமைய உள்ளன.

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இது அமலுக்கு வரும் இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்; அரசுக்கு ஆண்டுக்கு ரூ1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது

கமல் ரஜினி படத்திலிருந்து சுந்தர். சி விலகல்

மல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்தார். தவிர்க்க முடியாத சூழலால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்

டெல்லி குண்டுவெடிப்பு : மற்றொரு டாக்டருக்கு வலை வீச்சு

டெல்​லி​ குண்டு வெடிப்பு சம்​பவத்​தில், புல்​வா​மாவைச் சேர்ந்த முஜம்​மில், லக்​னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்​காமை சேர்ந்த ஆதில், புல்​வா​மாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைத​ரா​பாதைச் சேர்ந்த அகமது மொஹி​யுதீன், நகர் மகா​ராஜா ஹரிசிங் மருத்​து​வ​மனை டாக்​டர் தஜமுல் ஆகிய 6 மருத்​து​வர்​கள் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். இதில் சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து என்ஐஏ விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த சம்​பவத்​தில் ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் நிஸார் உல் ஹசன் தொடர்​புள்​ளது […]