தமிழகத்தில் நாளை கனமழை

தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று (நவ.27) வடமேற்காக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை (நவ.28) கடலோர தமிழகத்தில் […]

அடுக்குமாடி குடியிருப்பு தீவிடத்தில் 44 பேர் உயிர் இழப்பு

ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸ் பகுதியில் உள்ள டாய் போ மாவட்டத்தில் அமைந்திருக்கும் 31 அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்ந்துள்ளர். சுமார் 300 பேரை காணவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த 30 ஆண்டுகளில் ஹாங்காங் நகரம் கண்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.

2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2030ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் கூட்டமைப்பு இந்த ஒப்புதலை அளித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 2030ம் ஆண்டு மீண்டும் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த அனுமதி கிடைத்துள்ளது. முன்னதாக, 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தவெக வில் இணைந்தார் செங்கோட்டையன்

இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார். அவரை தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தவெகதலைவர் விஜயை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். செங்கோட்டையனுடன், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர். தவெகவில் செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது., மேலும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது செங்கோட்டையன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து செயல்படுவார் எனவும் […]

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைவு

தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180 க்கு விற்பனை ஆகிறது

பொடி இட்லி’ முதல் ‘பிரியாணி’ வரை.. Air India அசத்தல்!*

Air India நிறுவனத்தின் சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகளும் புதிதாக சேர்ப்பு. குறிப்பாக தமிழ்நாட்டின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி உள்ளிட்டவையும், பிரியாணி, மலபார் கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.*

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய 2 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

இம்ரான் கான் உயிரிழப்பா? – சகோதரிகள் குற்றச்சாட்டு!*

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவும் நிலையில், அவரை சந்திக்க கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்படவில்லை என்று அவரது சகோதரிகள் குற்றச்சாட்டு. அனுமதி கோரி அமைதியான முறையில் போராடியபோது, போலீசாரால் மிருகத்தனமான தாக்குதலுக்கு தாங்கள் உள்ளானதாகவும் சகோதரிகள் பேட்டி

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும்