இண்டிகோ விமான ரத்தால் மற்ற விமானங்கள் வசூல் கொள்ளை

மத்திய அரசின் புதிய விதிமுறை காரணமாக விமானிகள் பணிக்கு வராத காரணத்தால் இண்டிகோ விமானம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது இதனால் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களின் விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், அந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வழக்கமாக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானத்தில் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை […]

இந்தியா முழுவதும் ஆயிரம் விமானங்கள் ரத்து

வி​மானிகள் பற்​றாக்​குறை காரணமாக இண்​டிகோ நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணி​கள் தவித்து வரு​கின்​றனர். நாட்​டின் மிகப்​பெரிய விமான நிறு​வன​மான இண்​டிகோ, தின​மும் நாடு முழு​வதும் 2,200 விமானங்​களை இயக்கி வரு​கிறது. இந்த நிலையில், விமானிகளின் பணி நேர வரம்பு (எப்​டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்​தப்​பட்ட விதி​முறை​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதன்​படி, விமானிகளுக்கு பணிநேரம், ஓய்​வுநேரம் நிர்​ண​யிப்​பது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ள​தால், விமானிகளுக்கு பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ளது

வங்கக்கடலில் உருவானது ‘டிட்வா’ புயல்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்தது. புயலாக உருவானதை தொடர்ந்து ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ (DITWAH) என பெயர் சூட்டியது இந்திய வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் – இந்திய வானிலை […]

ரெட் அலர்ட் – முதல்வர் உத்தரவு.

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட். கண்காணிப்பு அதிகாரிகள்‌ மாவட்டங்களுக்கு விரைந்து செல்லவும், மீட்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவு.

எடப்பாடிக்கு கோவணம் கூடமிஞ்சாது நாஞ்சில் சம்பத் தாக்கு

செங்கோட்டையன் த.வெ.க வில் இணைவது குறித்து மூத்த அரசியல் விமர்சகரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் தனது கடுமையான கருத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “கோட்டைக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டு மூத்தவர்களையும் காத்தவர்களையும் கட்சியைவிட்டு வெளியேற்றிய எடப்பாடிக்கு, போகிற போக்கை பார்த்தால் கோவணம் கூட மிஞ்சாது போல் தெரிகிறது.” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது” – அதிமுக தலைவர் செம்மலை

அதிமுக தலைவர் செம்மலை கூறியதாவது. ஊர் ஊராக சென்று கொடியேற்றி ஆட்சியை பிடிப்பேன் என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயம். செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து போன ஒன்றாகி விட்டது” இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.

இன்றே உருவாகிறது புயல்

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]

அவசர உதவி எண்கள் மாற்றம்

பொதுவாக, பிரசவ வலி முதல் சாலை விபத்து, மாரடைப்பு போன்ற எந்த மருத்துவ உதவிக்கும், 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்போம். ஆனால், அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன * 102 கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு *1073 சாலை விபத்துகளுக்கு 104-இலவச மருத்துவ உதவிகளுக்கு. மற்ற உதவிகளுக்கு 108′ என்ற எண்ணில் அழைக்கலாம்.