ரஷ்யா எங்கள் நண்பன். நரேந்திர மோடி.

இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது. இந்த நட்பு உறவுக்கு புடின் 25 ஆண்டுகளுக்கு முன்னேரே நமக்கு உதவியாக இருந்தார். பொருளாதார முன்னேற்றம், யூரியா தயாரிப்பு, அணு தயாரிப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செல்லும். ரஷ்யர்களுக்கு விரைவில் 30 நாள் இலவச சுற்றுலா விசா வழங்க ஏற்பாடு நடக்கிறது. உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம்.

புதுவையில் விஜய் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி.

புதுவையில் டிசம்பர் 9இல் நடைபெறும் தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளித்தார் முதல்வர் ரங்கசாமி தலைமைச் செயலகத்தில் முதல்வர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்த தவெக பொதுச்செயலர் ஆனந்த் பொதுக் கூட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றுச் சென்றார்.

ஸ்டாலின் சக்கர வியூகம் – சேகர்பாபு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு சங்கிகளை தவிர்த்து ஒட்டுமொத்தமாக ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள் முழு ஆதரவு தந்திருக்கிறார்கள்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: அதிமுகவை பொறுத்தவரை , ஜெயலலிதா இருந்தபோது அக்கட்சி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தும் சுயசிந்தனையோடு எடுக்கப்பட்டவை. ஆனால் தற்போது அக்கட்சியின் நிலைப்பாடு அனைத்தும் டெல்லியில் அமித் ஷா சொல்வதைப் பொறுத்து நடக்கிறது. அதிமுகவினர் தாங்கள் கொண்ட கொள்கைகள், லட்சியங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் […]

மதுரை புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்:

மதுரை மேலமடை சந்திப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை (07.12.2025) திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.

‘ தாம்பரம் யு டியூபர்’ வாராகிக்கு குண்டாஸ்

‘யு டியூபர்’ வாராகி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம் பரத்தை சேர்ந்தவர் வாராகி என்ற கிருஷ் ணகுமார், 51; யு டி யூபர். இவர் மீது, மிரட்டி பணம் பறிப்பது உட்பட 30க்கும் மேற் பட்ட வழக் குகள் உள்ளன. கிருஷ்ணகுமார் சில தினங்களுக்கு முன், பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லையில், வாட கைக்கு சென்று வீட் டின் உரிமையாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். தற்போது, சென்னை மாநகர போலீசாரால், குண்டர் […]

மீண்டும் இயங்கத் தொடங்கிய இண்டிகோ விமானங்கள்

சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின இண்டிகோ விமான சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் சற்று நிம்மதி இருப்பினும் அனைத்து விமானங்களும் இயங்க தொடங்கவில்லை; இன்றும் 48 விமானங்கள் ரத்தாகியுள்ளன. விமானிகள் வாரத்தில் 48 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற விதி காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது தற்போது மத்திய அரசு அந்த விதியை ரத்து செய்துள்ளது

ரஷ்ய அதிபர் புதன் விருந்தில் முருங்கை இலை சூப்

குடியரசுத் தலைவர் மாளிகையில், ரஷிய அதிபருக்கு சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பாரம்பரியமிக்க உயர்ந்த சுவையுடைய சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அதில், முருங்கை இலை சாறு, சுவையான ரசம், காஷ்மீரி வால்நட் குச்சி டூன் செடின், கார சட்னி – ஜோல் மோமோ என காஷ்மீர் முதல் தமிழகம் வரை மிகவும் பாரம்பரியமான உணவுகள் தேர்வு செய்யப்பட்டு மிகுந்த ருசியுடன் தயாரிக்கப்பட்டு பரிமாற்றப்பட்டுள்ளது. முக்கிய உணவுகளின் பட்டியலில் ஸஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேதி மட்டர் […]

சென்னையில் விஜய்யுடன் காங்கிரஸ் பிரமுகர் ரகசிய சந்திப்பு

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தவெகவில் இணைவதாக கூறப்படுகிறது.அவர் விஜயை ரகசியமாக சந்தித்து உள்ளார் மயிலாப்பூர் தொகுதி கேட்கிறார் இதனால் காங்கிரசார் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்

தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கத்தின் விலை நேற்று விற்ற விலையிலிருந்து ரூ.320 அதிகரித்து, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.96,320-க்கும், கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,040-க்கு விற்பனையாகிறது.

அணில் அம்பானியின் 1120 கோடி சொத்து முடக்கம்

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்​பானிக்கு சொந்​த​மான நிறு​வனங்​களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்​தது. பின்​னர் இந்த முதலீடு வாராக் கடன்​களாக மாறின. இதுகுறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூல​மாக அனில் அம்​பானி குழு​மத்​தின் நிதி நிறு​வனங்​களுக்கு வந்​துள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்து அனில் அம்​பானி​யின் 18 சொத்​துக்​களை அமலாக்​கத் துறை தற்போது முடக்​கியது. இவற்​றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். கடந்த […]