ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி.

3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று(டிச.15) முதல் டிச.18 வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி.

தமிழ்நாட்டுக்கு மீண்டும் புயல் எப்போது?

இந்த மாத மத்தியில் தமிழகத்தில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. இது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் வருகிற 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரமாகும். 15 ந்தேதியும் 17 – ந் தேதியும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது தென்மாவட்டங்களிலும் மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்றார்

எங்கள் ஆட்சியில் தீபம் ஏற்றுவோம் – அதிமுக

2026-ல் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரைக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தற்போது முதல்வர் திடீரென மதுரையின் வளர்ச்சி பற்றி பேசுவது வியப்பளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். என்றார்

நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் த.வெ.க இணைந்தார்.

தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகளில் இருந்த மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில்தமிழக வெற்றிக் கழகத்தில்இணைந்தார். என்னைப் பார்த்ததும், “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார் விஜய். நான் மெய்சிலிர்த்து போனேன். விஜயை சந்தித்த நேரத்தில் இருந்து புதிதாகப் பிறந்ததைப் போல எண்ணுகிறேன்; என்னுடைய பாதையை விஜய் தீர்மானித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது அவருக்கு நல்லது.

தமிழகம் மீது புடின் அக்கறை!

இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு காஸ், எண்ணெய், நிலக்கரி சப்ளை செய்வதில் ரஷ்யா முக்கிய நாடாக உள்ளது’. ‘தமிழகத்தில் முக்கிய திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். கூடன்குளம் அணுமின் நிலையம் மேலும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியர்கள் மிக மலிவான விலையில் மின்சக்தியை பயன்படுத்தலாம்- டில்லியில் ரஷ்ய அதிபர் புடின் பேட்டி கூடன்குளத்தில் உள்ள 6 உலைகளில் தற்போது இரண்டில் மின் உற்பத்தி நடக்கிறது. 3வது உலைக்கான யுரேனியம் […]