வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசளிக்கப்பட்டது.
பொங்கல் கொண்டாட தமிழகம் வரும் மோடி.
தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவர் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக வரவுள்ளார் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பிரச்சார முன்னோட்டம் தான் இந்த நிகழ்ச்சி என கூறப்படுகிறது.
சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: நிர்மலா சீதாராமன் 24வது இடம்
பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள, 2025க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட நம் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்று உள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025க்கான பட்டியலை அந்த பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் […]
உரிமம் இல்லாத நாய்களுக்கு இன்று முதல் அபராதம்
சென்னையில் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க 15 குழுக்கள் நியமனம் செய்யப் பட்டு உள்ளன என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 59 ஆகும். இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64 ஆயிரத்து 776 பக்தர்கள் […]
அனிருத் மீது பாயும் தெலுங்கு இசை அமைப்பாளர்
இசை அமைப்பாளர் தமன் கூறியதாவது `தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக..’’வேலை செய்கிறார்கள் என்று இசையமைப்பாளர் தமன் கூறினார்
ரூபாய் ஒரு லட்சத்தை எட்டிய தங்கம் விலை
இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,08,744 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.83,200-க்கும் விற்பனை ஆகிறது.
ஈரோடு விஜய் கூட்டதிற்கு 50000 கட்டணம்
விஜய் மக்கள் சந்திப்பு – இந்து அறநிலையத்துறை நிபந்தனை விதித்து உள்ளது. ஈரோடு, விஜயமங்கலம் அருகே வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ரூ.50,000 வைப்புத்தொகை மற்றும் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் என 5 நிபந்தனைகளுடன் அனுமதி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்! – பாஜக அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம்:
மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தூங்கும் வீடு இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்திலேயே இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும். இவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது