ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று வர்த்தக நேர முடிவில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ. 90.78 ஆகக் குறைந்தது

ஸ்டாலினை அடுத்தடுத்து சந்திக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்

திமுக கூட்டணி தலைவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் சந்தித்தார்கள் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சந்திப்பு என தகவல்

சோனியாவுக்கு எதிரான குற்றப்பத்திகையை ஏற்க கோர்ட் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி அருகே மூடுபணியால் 3 கார்கள் மோதல் 4 பேர் பலி.

மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று காலையில் மூடுபனியால் ஏற்பட்ட குறைந்த காணும் திறன் காரணமாக பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த மோதலுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்தன. இதுகுறித்து பேசிய மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார், “இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நடந்த ஒரு பெரிய சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் […]

கொங்கு பகுதிகளில் அதிக விவாகரத்து – அண்ணாமலை தகவல்

திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: இந்து மதத்தினர் அதிக அளவில் விவாகரத்து செய்கின்றனர். அதுவும் கொங்கு பகுதிகளில், அதிக அளவு விவாகரத்து நடக்கிறது. தற்போதுள்ள ஜென்சி மற்றும் ஜென் ஆல்ஃபா போன்ற தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு ஆன்மீகவாதிகளும், துறவிகளும் போதிக்க வேண்டும். என்றார்

குறைந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 16) சவரனுக்கு ரூ. 1,320 குறைந்து ஒரு சவரன் ரூ. 98,800-க்கும் கிராமுக்கு ரூ. 165 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!

திருநெல்வேலியில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து வைக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழர்களின் பண்பாடு, ஆரம்ப காலம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்தார். இந்த அருங்காட்சியகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ம் தேதி அடிக்கல் நாட்டியதுடன் ரூ.56.36 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். […]

குடியரசுத் தலைவர் டிச. 17-ல் வேலூர் வருகை!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்

விஜய் கூட்டத்துக்கு புதிய கட்டுப்பாடு

ஈரோட்டில் தமிழக வெட்டி கழக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இதற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளில் ஒன்று“போதுமான CCTV-க்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிக்க கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். Drone Camera மூலம் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது

சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. […]