செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு லட்சம் வாக்காளர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மொத்தமுள்ள 27,87,362 வாக்காளர்களில் 7,01,901 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை 20,85,464 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 25.18% ஆகும்.
டெல்லி பனிமூட்டம் வாகன விபத்துகளில் 13 பேர் உயிரிழப்பு
யமுனா விரைவு சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் அதிகாலையில் சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் பார்வைக்கு தெரியாத நிலை உள்ளது.
தங்கம் விலை மேலும் உயரும்
தங்கம் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்களை கவ லையில் உறைய வைத்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்திருப்ப வர்களுக்கு தங்கம் விலை உயர்வு தீராத தலைவலியை கொடுத்து ருக்கிறது. இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் கோல்டுகுரு சாந்தகுமார் கூறியதாவது:- அமெரிக்கா வட்டி விகிதத்தை குறைத்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால் வைப்பு நிதியில் முதலீடு செய்த வர்கள் பலரும் தங்கத்தின் மீது தங்களது […]
நாடு முழுவதும் ரூ.10, ரூ.20, ரூ.50 ரூபாய் நோட்டுகளுக்கு பற்றாக்குறை
இந்தியா உடன் ராணுவ உறவை வலுப்படுத்திய ரஷ்யா!
இந்தியா – ரஷ்யா இடையே ராணுவப் படைகளை பரிமாறிக்கொள்ளும் RELOS ஒப்பந்தத்தை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றிய கூட்டாட்சி சட்டத்தில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புதின்! இதன் மூலம் ரஷ்யாவின் வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும், அதேபோல் இந்தியாவின் படைகள் ரஷ்யா செல்வதற்கும் வழிவகை செய்கிறது. ராணுவப் பயிற்சி, பேரிடர் பணிகள் மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இந்த ஒப்பந்தம் பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.
ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள்!
2026ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள்… 1) முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன். அவரை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 2) இரண்டாமிடத்தில் மதீஷா பதிரானா உள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் வாங்கப்பட்டார். 3, 4) மூன்றாம், நான்காம் இடங்களில் இளம் வீரர்களான கார்த்திக் சர்மாவும் […]
அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. சென்னை முதல் குமரி வரை 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன. கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், […]
SIR பணிகள் – 58 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்!
மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது இறந்தவர்கள் 24 லட்சம், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் மற்றும் போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் உள்பட 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு
பூந்தமல்லி – போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!
சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம்!
திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞரை வெளியேற்றவும், பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.