தாம்பரத்தில் கிறிஸ்துமஸை முன்னிட்டு இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் உயிரித்தெழுதல் வரை தத்ரூபமாக நடித்து உலக சமாதானம் அடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் உள்ள தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சார்பில் கடந்த 30 வருடங்களாக கிறிஸ்மஸ் பெருவிழா இப்பகுதியில் நடைபெற்று வருகிறது அதன்படி இந்த வருடமும் கடந்த இரண்டு நாட்களாக மார்க்கெட் பகுதியில் கிறிஸ்மஸ் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இன்று குரோம்பேட்டை நியூ லைப் ஜெம்ஸ் சபையின் தலைமை போதகர் பாஸ்டர். ஐசக் டேனியல் குழுவினர் கிறிஸ்து பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவைகள் குறித்து அனைவரும் கவரும் விதமாகவும், மெய்சிலிர்க்கும் […]
நடிகர் கார்த்தி படம் வெளிவருவதில் சிக்கல்
நடிகர் கார்த்தி நடிக்கும் படம் வாத்தியார் இந்த படம் தயாரிக்க 10 கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள் தற்போது கடன் வட்டியும் சேர்ந்து 20 கோடிக்கு மேலாகிவிட்டது அதை திருப்பி செலுத்தினால் தான் படத்தை வெளியிடுவோம் என்று கூறப்பட்டது ஏனென்றால் படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது
விவசாய சங்க தலைவர் 13 ஆண்டு சிறைக்கு தடை
பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதனை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார் இதைத் தொடர்ந்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
அரசு ஊழியர் போராட்டம் – அமைச்சர் பேச்சு வார்த்தை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.”
தங்கம் விலையில் குறைவு
இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,380க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.99,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகக்கோப்பை கால்பந்து அணிக்கு ரூ.450 கோடி பரிசு
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 48, அணிகள் பங்கேற்கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான பரிசுத்தொகையை ஃபிபா அறிவித்துள்ளது. இதன்படி தொடருக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.450 கோடியை பரிசாக அள்ளிச்செல்லும். 2022-ம் […]
தில்லி – ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!
தில்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு, வரும் ஜன.2 ஆம் தேதி முதல் நாள்தோறும் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது
ஸ்பீக்கர் டவரில் ஏறி விஜயிடம் பறக்கும் முத்தம் கேட்ட தொண்டர்
ஈரோட்டில் நடந்த விஜய் பொதுக்கூட்டத்தில் ஒரு தொண்டர் ஸ்பீக்கர் டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டு பறக்க முத்தம் கேட்டார் நீ பார்த்த விஜய் நீங்கள் கீழே இறங்கினால் தான் முத்தம் தருவேன் என்று கூறினார். பலமுறை விஜய் இவ்வாறு கூறிய பிறகு அந்த தொண்டர் கீழே இறங்கினார்
சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம், சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்… தவெக தலைவர் விஜய்.
“அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அவர்கள் பேசும்போது, “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே” எனக் கூறினார். நான் பேசினால் மட்டும் சினிமா வசனமாம், சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம்… சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்!” – தவெக தலைவர் விஜய்
இன்றுடன் விடைபெறும் வடகிழக்கு பருவமழை.
நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும், இந்த மாதம் இறுதி வரை பெரிதாக மழைக்கு வாய்ப்பு ஏதும் தென்படவில்லை,மீண்டும் ஜனவரி மாதம் குளிர்கால மழை வாய்ப்பு உருவாக்கலாம். தமிழகத்தில் நாளை முதல் பனியின் தாக்கம் அதிகரிக்கும். இலங்கைக்கு தெற்கு பகுதிகளில் நிலவி வரும் காற்று சுழற்சியின் காரணமாக அடுத்து வரும் 3, 4 நாட்களுக்கு இலங்கையில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழையும் ஆங்காங்கே கனமழையும் தொடரும் வாய்ப்பு உள்ளது.