சிறுவனுக்கு பாலியல் தொல்லை – சலூன் கடை ஊழியர் கைது
ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அஸ்தினாபுரம் பகுதியில் சலூன் கடை ஊழியர் போக் சோவில் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி, உலகின் 4 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இதே வேகத்தில் சென்றால், 2030ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியை முந்தும் நிலையை இந்தியா எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2025 : இந்தியாவின் வளர்ச்சியை வரையறுக்கும் ஆண்டு என்ற தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. […]
திருத்தணியில் சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம்!
கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வடமாநில இளைஞர் சுராஜ், முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் அவருடன் செல்லாமல் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி இந்தியா முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. இதனை போலீசார் கண்டித்து உள்ளனர். வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசும் உறுதி செய்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலுக்குள் ஓட்டு கேட்ட விஜய் ரசிகர்கள்
திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், “அடுத்த வருடம் அறநிலையத் துறையைடேக்-ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை’’ எனக்கூறி விஜய்யின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
முஸ்லிம் பெண்ணை காதலித்து மணக்கும் பிரியங்கா மகன்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா – ராபர்ட் வதேரா தம்பதிக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழி முஸ்லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அவிவாவின் தந்தை இம்ரான் தொழிலதிபர், தாய் நந்திதா பெய்க் பிரபல டிசைனராக பணிபுரிகிறார்.பிரியங்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறுகிறது.
சபரிமலை மகர ஜோதிக்கு 35,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி!
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மகர ஜோதி அன்று 35,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
காங்கிரஸ் மேலிடத்திற்கு பா சிதம்பரம் கண்டிப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம் கூறியதாவது:-தமிழ்நாட்டில் நிச்சயமாக திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம். மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்படுங்கள். வீணாக தமிழகத்தில் டெல்லி தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என,நான் காங்கிரஸ் தலைவரிடம் கூறிவிட்டேன் என்றார்.
யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? – விஜய் கேள்வி
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியம். இளைஞர்களுக்கு எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? இவ்வாறு தவேக தலைவர் விஜய் கேள்விகளை எழுப்பினர்.
தங்கம் விலை மேலும் குறைந்தது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.