கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது

நேற்று முழுவதும் அலிகான் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று கைது சில தினங்களுக்கு முன் கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் கைது மன்சூர் […]
திருவண்ணாமலையில் மண் சரிவு – ரூ.5 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு இன்று இரவுக்குள் நிவாரணத் தொகையை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு..
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

“ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்”
இன்றைய தங்கம் நிலவரம் 03-12-24
திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவில் புதைந்த வீடுகளுக்குள் 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் […]
7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. […]
ஏரிகள் உடைப்பு தத்தளிக்கும் விழுப்புரம்; ரயில்கள் பாதியில் நிறுத்தம்; பயணிகள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளை அழைத்து வர சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 37 செ.மீ. அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டோடியது. இதில் பஸ் நிலையத்தையொட்டி,கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடியோடு அடித்து […]
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கடலூரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு.
ரயில்கள் ரத்து எதிரொலியாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் விழுப்புரம் ரயில்வே சந்திப்பு, திருக்கோவிலூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் 4 இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் இன்றுடன் தனது பனியை முடித்துக் கொள்வதாக தகவல்?

நேற்று இரவு 11மணிக்கு மதுரா கோட்ஸ் மில் தூத்துக்குடியில் எல்லா வகையான பணிகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 144 ஆண்டு கால வரலாறு படைத்த புகழ் பெற்ற தொழில் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலமையா?? 1970 களில் அரசு வேலையை நிராகரித்து விட்டு இருமடங்கு சம்பளம் இந்த மில்லில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மால் மறக்கவே முடியாது. இவர்கள் கூட்டமாக வேலைக்கு செல்லும் அழகே தனி. மேலும் ஹார்வி மில்லில் ( […]
புதுச்சேரி, விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் மக்கள் தவிப்பு

புதுச்சேரி / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. திங்கள்கிழமையைப் பொறுத்தவரையில், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், […]