வண்டலூர் அருகே லாரி மீது மோதி ஆட்டோ டிரைவர் பலி

சென்னை அடுத்த வண்டலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தாமஸ்(41), வண்டலூர் வெளிவட்ட சாலையில் வண்டலூரை நோக்கி ஆட்டோவை ஓட்டிவந்துள்ளார், வரதராஜபுரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட டாரஸ் லாரி பின்புறம் அதிவேகமாக மோதியதால் ஆட்டோவின் முன்கண்ணாடி உடைந்து ஓட்டுனர் தாமஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவு ரத்தம் வெளியேறியது, இதனால் தாமசை அவசர ஊர்தியில் வந்த மருத்துவ பணியாட்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கு செல்லும் வழியில் தாமஸ் உரிழிந்ததார், இதனையடுத்து […]

தாம்பரம் மாநகராட்சிக்கு 4 புதிய குடிநீர் லாரிகள்

ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 4 தண்ணீர் லாரிகள் மாநகராட்சி வாங்கப்பட்ட நிலையில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கிவைத்தனர், இந்த நிகழ்ச்சியில்மண்டல குழு தலைவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்

வீட்டு முன்பு நின்ற காரில் திடீர் தீ

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (28) இன்று காலை தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்ற போது திடிரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததுடன் தீபிடித்து எரிய தொடங்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் தீயணைப்பு துறைதினருக்கு தகவல் அளித்த பின்னர் அக்கம்பக்கத்தொனர் உதவியுடன் தீயை அனைக்க முயன்றனர் ஆனால் காரின் முன்பக்கம் மளமளவென எரிய தொடங்கியது சமபவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையின் தீயனை அனைத்தனர், ஆனால் […]