மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி அவர்கள்‌ ஆளுநர்‌ மாளிகையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌

முன்னிலையில்‌ நடைபெற்ற பதவியேற்பு விழாவில்‌, வி. செந்தில்‌ பாலாஜி அவர்களுக்கு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சராகப்‌ பதவிப்‌ பிரமாணமும்‌, ரகசிய காப்புப்‌ பிரமாணமும்‌ செய்து வைத்தார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ நா. முருகானந்தம்‌, இ.ஆப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ தலைமையில்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌, வடகிழக்குப்‌ பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது

இக்கூட்டத்தில்‌, மாண்புமிகு நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, மாண்புமிகு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, மாண்புமிகு நகராட்சி நிருவாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. ராமச்சந்திரன்‌, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ. அன்பரசன்‌,மாண்புமிகு மீன்வளம்‌ – மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை […]

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்?, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன்முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.

விஜய் கட்சி கொடிக்கு சிக்கல் தீர்ந்தது

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைகள் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது….பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்… அரசியல் கட்சியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஒப்புதலோ, அங்கீகாரமோ அளிப்பதில்லை என்றும் விளக்கம்.

திருப்பதி லட்டு விவகாரம்

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர், முன்ஜாமின் கோரி திருப்பதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்

நேபாள பெருவெள்ளம் – 170-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ▪️. நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. ▪️. கனமழையால் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன 42 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக டைமன் ராஜா தேர்வு..

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா.வெள்ளையன் மறைவை அடுத்து நடைபெற்ற முதல் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் யார்? என்பதில் சௌந்தரராஜன் டைமன் ராஜா இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.. இந்த நிலையில் தலைவராக டைமன் ராஜா ஒரு மனதாக தேர்வு தமிழ்நாடு வணிகர் சங்க […]

மயங்கிய கார்கே.. தாங்கிப் பிடித்த நிர்வாகிகள்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிக் கொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு லேசாக மயங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. திடீரென அவர் பேச்சை நிறுத்தி நிற்கவே சிரமப்படுவதை கவனித்த நிர்வாகிகள், உடனடியாக அவரை தாங்கிப்பிடித்து தண்ணீர் குடிக்க வைத்தனர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சிறிது நேரம் உரையாற்றிவிட்டு அமர்ந்தார் கார்கே.