ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 58 இடங்களில் அனுமதி கோரிய நிலையில் 6 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிபந்தனைகளின் அடிப்படையில் 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இபாஸ்: 5 மாதத்தில் நீலகிரிக்கு 13 லட்சம் பேர் வருகை

இ – பாஸ் நடைமுறைபடுத்திய 5 மாதத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 13 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் : உதயநிதி

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால்

99% சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவாலும், விழிப்புணர்வு இல்லாததாலும்தான் நடக்கிறது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு மட்டுமே சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் என ஜிவால் கூறினார்.
தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செப்டம்பர் 6ம் தேதி மட்டும் 3.74 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை

பாம்பன் ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை மேலே தூக்கி சோதனை நடத்தப்படவுள்ளது. செங்குத்து தூக்கு பாலத்தை முதல் கட்டமாக 10 மீட்டர் தூரம் தூக்கி அதிகாரிகள் சோதனை செய்யவுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப விருப்பங்களை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் அக்.24க்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட 2,202 பேருக்கு நகல் வழங்க H முதற்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.