தனது காலில் சுட்டுக் கொண்ட பாலிவுட் நடிகர்!

பாலிவுட் நடிகர் கோவிந்தா லைசென்ஸ் உடன் கூடிய துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் தவறுதலாக இன்று காலை தனது காலில் சுட்டுக் கொண்டார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்: நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் பெறாமல் ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நர்சிங் கவுன்சில் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை

இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கான இலவச விசா நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு விசா இல்லாமல் இன்று முதல் பயணிக்கலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌

நடிகர்‌ திலகம்‌ சிவாஜி கணேசன்‌ அவர்களின்‌ 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன்‌ மணிமண்டபத்தில்‌ உள்ள சிவாஜி கணேசன்‌ அவர்களின்‌ திருவுருவச்‌ சிலைக்கு அருகில்‌ வைக்கப்பட்டுள்ள திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ மாண்புமிகு தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ சாமிநாதன்‌, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ மா. சுப்பிரமணியன்‌, மாண்புமிகு இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ பி.கே. சேகர்பாபு, பெருநகர […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌

நடிகர்‌ திலகம்‌ சிவாஜி கணேசன்‌ அவர்களின்‌ 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன்‌ மணிமண்டபத்தில்‌ உள்ள சிவாஜி கணேசன்‌ அவர்களின்‌ திருவுருவச்‌ சிலைக்கு அருகில்‌ வைக்கப்பட்டுள்ள திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நடிகர்‌ திலகம்‌ சிவாஜி கணேசன்‌ அவர்களின்‌ திரைப்‌ பயணம்‌ மற்றும்‌ வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கிடும்‌ வகையில்‌ அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்‌ கண்காட்சியினை பார்வையிட்டார்‌. உடன்‌ மாண்புமிகு தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌, மாண்புமிகு மருத்துவம்‌ […]

2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2ஆவது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது; வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷத்மன் இஸ்லாம் 50, முஷ்பிகுர் 37 ரன்கள் சேர்த்தனர்.

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.