மெட்ரோ 2ம் கட்ட திட்டம் – மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க ஒப்புதல்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
“AR Dairy நிறுவனம் நெய் தயாரிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை மத்திய உணவு பாதுகாப்பு துறை அறிக்கை வெளியீடு தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என்று மதிய உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஸ் குமார் நியமனம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜி சிவசங்கர் நியமனம் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமி சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனால் வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி முதல்வராக பவானி ஈரோடு மருத்துவ கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம் விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக ஜெய்சங்கா் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக லோகநாயகி தேனி […]
போலீசை குழப்ப வண்டி நம்பரை மாற்றிய பலே கொள்ளையன்

போலீசை குழப்ப ஒ.எல்.எஸ் ஆப்பில் விற்பனைக்கு பதியும் எண்களை தனது பல்சருக்கு பயன்படுத்திய செயின் பறிப்பில் ஈடுபடும் பலே கொள்ளையன் சென்னை-வேலூர்- சென்னை என 350 கி.மீ தூரம் 2ஆயிரம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொளையனை பிடித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி 30 ஆண்டுகளாக 35 வழக்குகளில் சிக்கி இரண்டு பெயரில் வலம் வந்தது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் 17ம் தேதி நடைப்பயிற்சி சென்ற சாந்தகுமாரி(59) கழுத்திலிந்து […]
இன்றைய தங்கம் நிலவரம் 03-10-24
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி […]
அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் 9000பேர் கண்தானம்

சென்னை அடுத்த அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை, 9 ஆயிரம் பேர் கண் தானம் பட்டியலை தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு மாநில திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.வி.சந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர் ஒரே நேரத்தில் 9 ஆயிரம் பேர் கண் தானம் மிக பெரிய சாதனை, தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக பெருமிதம் சென்னை அடுத்த கானத்தூரில் அமெட் பல்கலைக்கழகம் சார்பில் “விழி கொடுத்து வாழ்விற்கு ஒளி கொடுப்போம்” ஒரே நாளில் 9 ஆயிரம் பேர் கண் தானம் […]
உலகப்புகழ் பெற்ற குலசை தசரா் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளநிலையில், காப்பு கட்டி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
இன்று வியாழக்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் சிவப்பு நிற பட்டு உடுத்தி மங்களகரமாக அழகிய திருமுகத்துடன் ஆனந்த தரிசனம் தருகிறாள் என் அன்னை மேச்சேரிஶ்ரீபத்ரகாளிஅம்மன்
இஸ்ரேல் தீவிர தாக்குதல்: கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தகவல்

இஸ்ரேல் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதுடன், 85 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பெய்ரூட், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்குதலை தொடங்கி இருப்பதாகவும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப இந்த ராணுவ நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த […]