முள்ளான் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி?

குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம் நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்? நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகள்,விநாயர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்கவிருந்தபாஜக.,வின் மாநாடு, அதே போல் ஆண்டாண்டு நடக்கும்ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர […]

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: திணறிய சென்னை – என்ன நடந்தது?

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் பெரும் அவதியடைந்தனர்.சென்னை, இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 4 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். […]

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்

நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார். சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியின் பாதங்களில் வணக்கம்! அனைவருக்கும் சுக்தாயினி – மோக்ஷதாயினி மாதாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய ஒரு புகழுரை

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகசநிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்டநெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது

சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனிகூடுவதையும் தவிர்க்க வேண்டும். கனிமொழி M.P., டுவிட்

விமான சாகச நிகழ்ச்சிக்கான நேரத்தை தேர்வு செய்தது இந்திய விமானப்படை தான்

5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தமும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. -அமைச்சர் மா.சுப்பிரமணியன் (அலட்சிய) பேட்டி

சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது; நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் […]

பாம்பன் புதிய ரயில் பாலம்: பணிகள் அனைத்தும் ஓவர்… விரைவில் திறப்பு விழா!

ராமேசுவரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் ரயில்வே அமைச்சகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாம்பன் ரயில் பாலம் 1914ம் ஆண்டு கட்டப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினை, தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019 மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.