கால் வெடிப்புகள் மறைய வேண்டுமா…

கால் வெடிப்புகள் மறைய சில டிப்ஸ்… வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் கால் வெடிப்பு குணமாகும். தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்துத் தேய்த்தாலும், கால் வெடிப்பு மறையும்.இரவில் கைதாங்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் கால்களை ஊறவைத்து, கால்களுக்குத் தேய்க்கும் பிரஷ் அல்லது ப்யூமிக் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் துடைத்துவிட்டு ஃபுட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும். ஒருநாள் விட்டு ஒருநாள் எலுமிச்சம் பழத்தோலால் பாதங்களை நன்றாகக் தேய்த்துக் கழுவ […]
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி

தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் திடீரென்று இரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருதய நோய் நிபுணர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
தாம்பரத்தில் 500 மாணவர் பங்கேற்ற செஸ் போட்டி

தாம்பரத்தில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தாம்பரத்தில் ஜி.எம் செஸ் அகாடமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக துணை செயலாளர் மாசிலாமணி ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சதுரங்கபோட்டிகள் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர்,வேலூர், திருச்சி,திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 8வயது 10வயது,13வயது,மற்றும்25 வயதுடைய சுமார் 500 கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் […]
குரோம்பேட்டையில் நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்த வாக்கத்தான் போட்டி

குரோம்பேட்டையில் பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் ஐந்தாம் ஆண்டு வாக்கத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை நடிகை ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிட்லபாக்கம் எம். ஐ .டி கல்லூரி விளையாட்டு திடலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் அதன் 5வது ஆண்டு பெருநடை (வாக்கத்தான்) போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1-5ம் வகுப்பு மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலில் பதிவேற்றுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தல்!
விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை அக்டோபர் 9ம் தேதிக்குள் உள்ளீடு செய்வது அவசியம். இதற்கான வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன! இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

கராச்சி விமான நிலையம் அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் வெளிநாட்டுப் பயணிகள் இருவர் பலி; தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றதாக தகவல்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்

மதுரையில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து வருவதாகவும் வெகு விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்.
9 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு!
தமிழ் வழியில் கல்வி பயின்றதாகப் போலியான சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்த, வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, காவல்துறை டிஎஸ்பி கே.சி.சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் எம்.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் என்.ஏ.சங்கீதா உட்பட 9 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு! இவர்கள் மதுரை காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வி மூலம் போலியாக பட்டம் பெற்றதும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருவதும் விசாரணையில் […]