மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் பணியாளர்களும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்

தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைப்பு

கூட்ட நெரிசலில் விஜய் சிக்காமல் இருக்க, சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை நேரடியாக கொடியை ஏற்றிவிட்டு, மாநாட்டுத் திடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு மேலும் விஐபிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது

வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: சாம்சங் மூத்த அதிகாரி தகவல்

சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று அந்நிறுவன மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு செல்வதாக தகவல் பரவியதை அடுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தனியார் பள்ளியில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை ராயப்பேட்டை போலீஸ் தேடி வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை: மகாராஷ்டிரா முதல்வர்

மும்பை தேசிய மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ரத்தன் டாடாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என குடும்பத்தார் தகவல். ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை தரப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு.

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

மும்பை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவன தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டார். ரத்தம் அழுத்தம் குறைந்ததால் கடந்த திங்கள்கிழமை மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில், ரத்தன் […]