நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்து 79,356 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 286 புள்ளிகள் சரிந்து 24,113 புள்ளிகளில் வர்த்தமாகிறது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 6600 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் இளங்கோவனின் முசிறி கல்வி நிறுவனங்களில் 3-ம் நாளாக ஐடி ரெய்டு

திருச்சி: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் இளங்கோவனுக்க சொந்தமாக சுவாமி அய்யப்பா அறக்கட்டளை என்ற பெயரில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளாளப்பட்டியில் வேளாண் பொறியியல் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவராக சேலம் இளங்கோவன் மகன் பிரவீன் உள்ளார். இந்நிலையில் இந்த கல்வி […]

எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களின் படி சென்னையில் பிஎஸ்கே நிறுவனத்தில் ஐடி ரெய்டு: பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின

சென்னை: எடப்பாடியின் நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிஎஸ்கே குழுமம் இயங்கி வருகிறது. இது, அதிமுக ஆதரவாளரான தொழிலதிபர் பெரியசாமிக்கு சொந்தமான நிறுவனம். தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முக்கிய ஒப்பந்ததாரராக இந்த குழுமம் உள்ளது. அதேநேரம் அதிமுக ஆட்சியின் […]