மருத்துவரைக் குத்தியது ஏன்? – விக்னேஷ் வாக்குமூலம்

மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன். தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் – காவல்துறை தகவல் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.

நடிகை கஸ்தூரி ஜாமின் மனு தள்ளுபடி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் விவாதம்

இந்தியாவில் ஆண்களை போலவே பெண்களின் திருமண வயதையும் 21-ஆக உயர்த்துவது குறித்து, வரும் 22-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயது 21-ஆக உயர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை சங்கங்கள் யாவும் தங்கள் மீதான திமுக அரசின் கவனிப்பற்ற தன்மையைக் கண்டித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டுள்ளன

பள்ளிகளில் ரெகுலர் ஆசிரியர்கள் போக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமித்தல் தவறானது என்றும் இன்னும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து முதல்வரை சந்திக்க சென்றால் அவர்களை ஸ்டாலின் சந்திக்க மறுத்து விட்டார். திமுகவை ஆட்சிக்கட்டிலில்அமர வைத்து அழகு பார்த்தோம்! இப்போது முதல்வராக இருப்பதால் சந்திக்க மறுக்கிறீர்கள் !நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எங்களை சந்திக்க முடிந்தது. ஆனால் இப்போது மட்டுமென்ன மறுப்பு! அடுத்த தேர்தலில் உங்களை மறுபடியும் எதிர்க்கட்சி தலைவராக்கி வைப்பது தான் சிறந்தது […]

மருத்துவரைக் குத்தியது ஏன்? – விக்னேஷ் வாக்குமூலம்.

மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன். தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் – காவல்துறை தகவல் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம்.