இன்றைய தங்கம் நிலவரம் 27-11-24
லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இருந்து அமெரிக்க நீதித்துறையால் அதானி விடுவிப்பு

இந்திய பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியத்துக்கு அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி விளக்கம் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததை மறைத்து அமெரிக்காவில் முதலீடு திரட்டியதாக குற்றச்சாட்டு
வங்க கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் வானிலை மையம்இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் 29ம் தேதி வரை வங்க கடலில் புயலாகவே நீடிக்கும்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பயணிகளுடன் ரயிலை அதிகபட்சமாக 75 கி.மீ வேகம் வரை இயக்கலாம். செங்குத்து தூக்குப்பாலத்தில் மட்டும் 50 கி.மீ வேகத்தில் இயக்கப்படவேண்டும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி 100 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் பாலத்தை உயர்த்தி, இறக்க அனுமதி இல்லை. காற்றின் வேகம் 58 கி.மீ வேகத்தில் வீசினால் பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி இல்லை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும்

நாகையில் இருந்து 400 கி.மீ. தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை
பான் கார்டுகளில் QR குறியீடுகள் இருக்க வேண்டும்.

1,435 கோடி நிதி செலவில் பான் 2.0 திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியானது, தற்போதுள்ள பான் கார்டுகளுக்கு இலவச மேம்படுத்தல்களை வழங்கும், இதில் QR குறியீட்டைச் சேர்ப்பது, டிஜிட்டல் வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.
புயல் எச்சரிக்கை – பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்

“சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்” புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, ஆகிய மாவட்டகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
BREAKING | அரக்கோணத்தில் இருந்து 5 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை 5 மாவட்டங்களுக்கு விரைகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைகிறது. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்டா உள்பட 5 மாவட்டங்களுக்கு மீட்புக் குழு விரைகிறது.