1மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு

சென்னையில் பகல் 1 மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திலும் கனமழை தொடரும் -வானிலை ஆய்வு மையம்

கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இடைவிடாது பெய்யும் கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கூவம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

சென்னைக்கு வந்த விமானம் மோசமான வானிலையால் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. மாலை வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 1 வரை அதீத கனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை.

சட்டப் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் அனைத்து தேர்வுகளும் இன்று ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் அறிவித்துள்ளார். இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும்.

29.11.24 தற்போதைய நிலையில் பெங்கல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகருகிறது

புயலின் வேகம் நாகையிலிருந்து 290 கி.மீ சென்னையிலிருந்து 340 கி.மீ புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ இலங்கை திரிகோணமலையில் இருந்து 290 கி.மீ ஆகிய தொலைவில் புயல் நகருகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை […]

குரோம்பேட்டையில் மழையிலும் தீப்பிடித்து எரிந்த வீடு

குரோம்பேட்டை எம்.ஐ.டி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்(30) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இவரின் மனை, குழந்தயுடன் வசிந்துவந்தார், இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ஜெயராஜ் பணிக்கு சென்றார், மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களின் கொட்டகை வீடு எரிந்துள்ளது, தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் தீயை அனைத்தனர், ஆனால் கொட்டகை, வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது இது குறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் வழ்க்கு பதிவு […]