
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா – ராபர்ட் வதேரா தம்பதிக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழி முஸ்லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அவிவாவின் தந்தை இம்ரான் தொழிலதிபர், தாய் நந்திதா பெய்க் பிரபல டிசைனராக பணிபுரிகிறார்.பிரியங்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறுகிறது.