திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சரியானது. அறநிலைத்துறை கோவில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபத்தூண் கோவில் எல்லைக்குள் தான் உள்ளது என்று அதிரடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது என நீதிபதிகள் அரசின் நிலைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை கூறியுள்ளனர்.