
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் 47 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை வைபவம், புவனேஸ்வரி நகர் ஸ்ரீ அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 5:30 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது 9 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை வழிபாடு செய்தனர். மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6:30 மணியளவில் நாம சங்கீர்த்தனம் செங்கோட்டை ஸ்ரீ ஹரிஹர சுப்பிரமணிய பாகவதர் பாடினார்.

அதனைத் தொடர்ந்து 1.1.2026 வியாழக்கிழமை காலை 8:30 மணி அளவில் ஸ்ரீ ஐயப்பன் அர்ச்சனை நண்பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை அதைத்தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்க ஆஸ்தான பாகவதர் நொச்சூர் நாராயணன் குழுவினர் பாடுகின்றனர். பிற்பகல் 12.30 மணியளவில் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் V.N செல்லையா குழுவினர் நாதஸ்வர இன்னிசை 5 மணியளவில் நாம சங்கீர்த்தனம் லட்சுமி நாராயணா சத் சங்கம் குழுவினர் 6.30மணியளவில் திவ்யஜோதி தரிசனம் ஏழு மணி அளவில் ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா நடைபெறுகிறது. பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஐயப்பன் அருள் பெறுமாறு ஸ்ரீ சாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.