சென்னை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரைக்கும் மெட்ரோ ரயில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .

இந்த ரயில் இந்த மாதம் போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போரூரில் இருந்து நேரடியாக வடபழனிக்கும் ரயில் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை நடந்து வருகிறது .
இந்த மாத இறுதியில் இந்த போக்குவரத்து தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் போரூர் முதல் வடபழனி வரை நேரடி போக்குவரத்தையும் பின்னர் ஜூன் மாதம் இடையில் உள்ள ரயில் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வரும் என்று, சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.