
சென்னை:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், அதிமுக – பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி! அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்! திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அஇஅதிமுக நல்லாட்சியினை அமைப்போம்!” என்று தெரிவித்துள்ளார். ராமதாஸ் தரப்பு யாருடன் கூட்டணி வைக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.