
வரும் பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த விரும்பிய (அதிமுக – பாஜக) கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். வலுவான கூட்டணி. எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம்.
மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம். காரணம் சமீபத்தில் கூட நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்” என்று அன்புமணி தெரிவித்தார்.