திருப்பதியில் ரீல்ஸ் எடுக்க தடை
திருமலை திருப்பதி தேவஸ்தானம்வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு
ரீல்கள் மற்றும் வீடியோ பதிவு செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது
கோயில் வளாகத்திலும் மாட வீதியிலும் நடனமாடியபடி ரீல்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களின் மூலம் கோயிலின் புனிதத்தைக் கெடுப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
கோயிலின் புனிதம், கண்ணியம் மற்றும் ஆன்மீகச் சூழலைப் பேணுவதில் திருமலை தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
.



