ஊழல் முகத்திரை கிழிந்துவிட்டது-வானதிசீனிவாசன் தாக்கு.
பாஜக தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில்தென்காசி மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் என்பவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் அரசு செவிலியர் ஒருவரின் இடமாறுதலுக்காக ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக வெளியாகியுள்ள ஆடியோ விவகாரம் குறித்த செய்தி ஒருபுறம்; மறுபுறம், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக தன்னிடம் ரூ.5 கோடி வரை லஞ்சம் கொடுக்கப் பேரம் பேசப்பட்டதாகவும், இது லயோலா மணி அவர்களுக்குத் தெரியும் என அமைச்சர் ராஜ்மோகன்தெரிவித்திருப்பதும் என, அடுத்தடுத்து வெளிவரும் இந்தப் புகார்கள் தமிழக அரசியலில் தூய சக்தி எனக் கூறிக் கொள்ளும் ரீல்ஸ் தவெக ஆட்சியின் ஊழல் முகத்திரையைக் கிழித்திருக்கிறது.



