முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › குரோம்பேட்டை ஆலயங்களில் அண்ணா அபிஷேக சிறப்பு காட்ச
உள்ளூர் செய்திகள் குரோம்பேட்டை ஆலயங்களில் அண்ணா அபிஷேக சிறப்பு காட்சிகள்.
ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு குரோம்பேட்டையில் உள்ள சிவாலயங்களில் சிவனுக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பத்மநாப நகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு அண்ணா அபிஷேகம கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் காசி விஸ்வநாதருக்கு காய் கனிகளால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குரோம்பேட்டை காந்திஜி நகர் ஸ்ரீ அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமிர்தகடேஸ்வர் காய்கனிகளால் அலங்காரம் செய்து அண்ணா அபிஷேகத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோவில் ரோடு அமைந்துள்ள ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு அண்ணா அபிஷேக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலய நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்து அனைத்து ஆலயங்களிலும் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.



