தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும்
தற்பொழுது அரபிக் கடல் பகுதியில் மத்திய கேரளா பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. மேலும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அர்னாப் புயலாக உருவாகியுள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தின் ஊடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்.
இன்றும் (24) நாளையும் (25/ தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் திருநெல்வேலி மாஞ்சோலை மலைப் பகுதி கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய பகுதிகளும் உள் மாவட்டங்களில் ஈரோடு நாமக்கல் திருப்பூர் சேலம் கரூர் திருச்சி பெரம்பலூர் அரியலூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை மதுரை திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களும் கடலோரப் பகுதிகளான சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. எனவே இன்றும் நாளையும் இம்ம மாவட்ட மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.



