வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் ஊஞ்சல் தயாரிக்கும் மர கம்பெனியில் தீவிபத்து, கொளுந்துவிட்டு எரிந்ததால் சுற்றுவட்டத்தில் புகைமூட்டம்

தாம்பரம்:-வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் ஊஞ்சல் தயாரிக்கும் மரகம்பெனி ஓராண்டுக்கு முன்பே செயல்படாமல் முடப்பட்டது, இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் அந்த மரகம்பெனியில் தீபற்றி எரிந்தது, காற்றின் வேகம் மற்றும் பழைய காய்ந்த மரங்கள், அதன் கழிவுகள் கொளுந்துவிட்டு எரிந்ததால் கம்பெனியை விட உயரமாக தீயின் சூவாலை பற்றி எரிந்தது இதனால் சுற்றுவட்டத்தில் புகை மூட்டமும் ஏற்பட்டது, தகவல் அறிந்த மறைமலை நகர் மற்றும் சிறுசேரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து சென்ற வாகனகளில் சென்ற வீரர்கள் இரண்டு மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



