அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குழுவுடன் வரும் 5ம் தேதி கேரளா சென்று 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.
மார்ச் 9, 10ஆம் தேதிகளில் மேற்கு வங்காளம் சென்று சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்கின்றனர். பத்தாம் தேதிக்கு பின்பு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



