ஜெயிலர் -2 பார்க்க வந்த அனிருத் காவ்யா மாறன்
குரோம்பேட்டை திரையரங்கிற்கு டீலர் ரெண்டு படத்தின் காட்சியை காண இசையமைப்பாளர் அனிருத்தும் காவியா மாறனும் வந்தனர்
ஜெயிலர் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். முதல் காட்சியைக் காண்பதற்காகத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெற்றி திரையரங்குக்கு வருகை தந்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை படம் வெளியானதை முன்னிட்டு, குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் திரண்டனர். திரையரங்க வளாகத்தில் பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ரஜினிகாந்தின் பிரம்மாண்ட கட்-அவுட் அமைத்து, அதற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இன்று காலை முதல் காட்சியைப் பார்ப்பதற்காகக் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்குக்கு வருகை தந்துள்ளார் அவர் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்க்க உள்ளார்
மேலும் கலாநிதி மாறன் மகள் காவியா மாறனும் அந்த திரையரங்குக்கு காரில் வந்தார்
இதனால் ரசிகர்களும் ஆர்வத்துடன் திரையரங்கிற்கு உள்ளே சென்று படம் பார்த்தனர்



