மாநாட்டு மேடையில் அண்ணாமலை செய்த செயல்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற 'வீ தி லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் முதலாவது மாநாட்டில், அதன் நிறுவனர் அண்ணாமலை மேடையில் விழுந்து வணங்கித் தனது உரையைத் தொடங்கினார். இந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது, இயக்கம் தொடங்கிய நோக்கத்தின் 50 சதவீத இலக்கை எட்டிவிட்டதாகத் தனக்குத் தன்னம்பிக்கை வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெறும் 38 நாட்களில் எந்தவொரு அழைப்பும் இன்றி 19 லட்சம் உறுப்பினர்கள் தானாக முன்வந்து இந்த அமைப்பில் இணைந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், இந்த அமைப்பில் தாமும் ஒரு தன்னார்வலர் மட்டுமே என்று குறிப்பிட்ட அண்ணாமலை, ஆகஸ்ட் மாதத்தில் நதிநீர் சுத்தம் மற்றும் செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அடுத்த 6 மாதங்களில் மக்களின் 6 முக்கியப் பி…



