முகப்பு ›
உலக செய்திகள் › இஸ்ரேல் நாட்டில் ஆட்சி மாற்றம்
உலக செய்திகள் இஸ்ரேல் நாட்டில் ஆட்சி மாற்றம்
நடந்து முடிந்த இஸ்ரேல் பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அங்கு புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், நெதன்யாகுவை எதிர்த்துப் போட்டியிட்ட 'யஷார்' கட்சியின் தலைவர் காடி ஐசென்கோட் தாம் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.



