முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › திருமணத்திற்காக பணம் சேர்த்த வடமாநில இளைஞர் , மின்
உள்ளூர் செய்திகள் திருமணத்திற்காக பணம் சேர்த்த வடமாநில இளைஞர் , மின்சாரம் தாக்கி பலி
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னக்கர்ஜி
(32).இவர் கடந்த 5 ஆண்டுகளாக தாம்பரம் பகுதியில் தங்கி,திருமணம் செய்து கொள்வதற்காக பணம் சம்பாதிக்க கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கிழக்கு தாம்பரம் புத்தர் தெருவில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தில் மின் விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து,உயிருக்கு போராடிய முனகர்ஜியை ஆட்டோவில் ஏற்றி தாம்பரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது.
திருமண கனவுடன் உழைத்து வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் என்ன, பணியின் போது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



