முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › குரோம்பேட்டை பழைய அரசு மருத்துவமனையில் தொடர் திருட
உள்ளூர் செய்திகள் குரோம்பேட்டை பழைய அரசு மருத்துவமனையில் தொடர் திருட்டு, லைட், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடிய 3 இளைஞர்கள் கைது,சிசிடிவி காட்சியால் சிக்கினர்
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது. இங்கு காவலாளி இல்லாததை பயன்படுத்தி சிலர் அங்குள்ள லைட் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் இந்த மருத்துவமனை வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது. இளைஞர்கள் சிலர் அங்கு புகுந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனைக்குள் புகுந்து பொருட்களை இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (24), அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (30), திருநீர்மலை நாகல்கேணி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (24) ஆகிய மூன்று பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குரோம்பேட்டையில் மட்டுமின்றி புறநகர் பகுதியில் வேறு எங்கெல்லாம் இவர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



