"இந்தியாவில் நிபா வைரஸ்"

இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “புதிதாக யாருக்கும் நிபா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை, இந்தியாவில் நிபா பரவல் குறித்து கண்காணித்து வருகிறோம்” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



