ரயில் பயணிகளுக்கான யூடிஎஸ் செயலி மார்ச் முதல் நிறுத்தம்

இந்தியாவில் ரயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்கியமானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



