GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › தாம்பரத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய்
உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய் ஆதரவு மையமும் மருத்துவமனையும் திறக்கப்பட்டுள்ளது

👤 Admin 🕐 19 Feb 2026, 11:37 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தாம்பரம்:-இந்தியாவிலேயே முதன் முறையாக் தாம்பரம் சானடோரியத்தில் 180 படுக்கை வசதிகள், புறநோயாளிகள் பிரிவுகளுடன் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சென்னை மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் தாம்பரத்தில் ஒரு புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. தாம்பரத்தில் மக்களுக்காக மட்டுமே இந்த மிகப்பெரிய மருத்துவமனை திறந்து வைக்க பட்டுள்ளது.

மருத்துவமனை என்பது ஏற்கனவே கொரோன பேரிடர் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் இருந்து வருபவர்கள் தனிமை படுத்தும் வகையில் isolation வார்டு வேண்டும் இந்த மருத்துவமனை கட்டபட்டது.180 படுக்கைகள் உள்ளது இதில் ஒவ்வொரு ஆண்டும் 300 முதல் 400 நோயாளிகள் பெறுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இங்கு புறநோயாளிகள் பிரிவு, படுக்கை வசதியுடன் கூடிய அதிதீவிர நவீன சிகிச்சை பிரிவு 16 படுக்கைகள் பொது படுக்கை பிரிவுகள் 134 அது மட்டுமல்லாது கட்டணம் செலுத்தி பயன் பெற கூடிய வகையில் pay வார்டு 30 படுக்கைகள் என்று மொத்தமாக 180 பேர் சிகிச்சை பெரும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறுதி நிலையில் உள்ள நபர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான மனநிலை ஏற்படுவதற்கு தான் தமிழ்நாடு அரசின் சார்பில் புற்று நோய் நல் ஆதாரவு மையம் என்று திறக்க பட்டுள்ளது.

விளம்பரம்Advertisement

தனியார் மருத்துவமனை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இது போன்ற கட்டமைப்பு வசதிகள் உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஒன்றிய அரசு நிர்வாகம் செய்யக்கூடிய இடங்களிலும் கூட இப்படி ஒரு மருத்துவமனை இல்லை, இங்கு தான் முதன் முதலாக துவங்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறுதி நிலையில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி மனநிலை போன்றவை உருவாக்குவதற்கு கவுன்சிலிங்,யோகா போன்ற பல்வேறு வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் அரசு மருத்துவர்களோடு சேர்ந்து சித்த மருத்துவகர்களும் இந்த பணியில் ஈடு படுவார்கள் என்று கூறி உள்ளார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்ப வலி நிவாரணம் அறிகுறி மேலாண்மை உளவியல் சமூக ஆதரவை இந்த அரசு கருத்தில் கொண்டு திறந்து வைக்க பட்டுள்ளது.

30 கோடியே 16 லட்சம் மதிப்பில் இந்த மருத்துவமனை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க பட்டுள்ளது.

இந்த நிகழ்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், சுகாதார துறை செயளர், செங்கல்பட்டு ஆட்சியர், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement