ராகுல் காந்தி - ஸ்டாலின் தொலைபேசி உரையாடலில் உறுதியான தொகுதி உடன்பாடு

நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்த கே.சி.வேணுகோபால் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இதில் கனிமொழி எம்.பி. மற்றும் சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதல்வர் சிங் தியோ ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். சந்திப்பின்போது ராகுலிடம் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், முதல்வர் இல்லத்தில் தயார் செய்யப்பட்ட உணவை அருந்தியபடியே தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி தொகுதி உடன்பாடு உறுதி செய்யப்பட்ட நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்பது குழு சந்திப்புக்கு பின்னர் வெளியிடப்படும்.



