GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால்
ஆன்மிகம்

ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்…

👤 Admin 🕐 24 Mar 2026, 04:09 👁️ 19 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் மிகவும் உயர்வானதாக கருதக்கூடிய அவதாரம் ஸ்ரீ ராம அவதாரமாகும். அதாவது தெய்வம் மனிதராக அவதரித்து நல்ல தலைவனாக நண்பனாக எப்படி தர்மத்தின் வழியே வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக ராம அவதாரம் உள்ளது. அதாவது தெய்வமாகவே இருந்தாலும் மனித அவதாரம் என்று எடுத்து விட்டால் அவர்கள் கட்டாயம் நிறைய துன்பங்களையும் சோதனைகளையும் கடந்த ஆக வேண்டும் என்பதை நமக்கு ஸ்ரீ ராம அவதாரம் தெளிவாக உணர்த்துகிறது.அப்படியாக மகாவிஷ்ணுவின் ஏழாவது அவ தாரமான ஸ்ரீ ராம அவதாரம் சைத்ர மாதம் எனப்படும் பங்குனி மாதம் வளர்பிறையில் வரும் ஒன்பதாவது திதியான நவமிக்கதியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் என புராணங்கள் சொல்கிறது. ஸ்ரீ ராமர் அவதரித்த அந்த நாளை நாம் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடுகின்றோம். சைத்ர நவராத்திரியில் இறுதி நாளாக ஸ்ரீ ராமநவமி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராம நவமி பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு செய்யும் பொழுது நாம் நினைத்த காரியத்தை செய்யக்கூடிய வலிமையை ஸ்ரீ ராமர் நமக்கு கொடுப்பார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.மேலும் இரண்டு நாட்கள் ராம நவமி திதி இருப்பதால் எந்த நாளில் ஸ்ரீ ராம நவமையை கொண்டாடுவது என பலருக்கும் குழப்பம் இருக்கிறது. அந்த வகையில் மார்ச் 27 ஆம் தேதி அன்று சூரியன் உதயத்திற்கு முன்பு தான் நவமி திதி உள்ளது. அதே போல் ராமர் அவதரித்ததாக சொல்லப்படும் புனர்பூசம் நட்சத் திரமும் மார்ச் 27ம் தேதியன்று தான் வருகிறது. அதனால் மார்ச் 27ம் தேதியையே ஸ்ரீராமநவமி நாளாக கருதி, நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் முறை:
ஸ்ரீ ராமநவமி அன்று அதிகாலை எழுந்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் எளிதான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.அன்று நாள் முழுவதும் ஸ்ரீ ராமர் மந்திரங்களை பாராயணம் செய்வது "ஸ்ரீ ராம ஜெயம்" என்று மந்திரத்தை எழுதுவதும் மிகச் சிறந்த பலன் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் அன்றைய நாள் இராமாயணம் படிப்பதும் ஸ்ரீ ராமரின் பெருமைகளை பேசுவதும் அவரின் நாமங்கள் கேட்பது உச்சரிப்பதும் நமக்கு மிகப் பெரிய அளவில் நன்மைகள் செய்யும். ஸ்ரீ ராமபிரானுக்கு மிகவும் பிடித்தமான அவல், பாயாசம், நீர் மோர் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம். முடிந்தவர்கள் ஸ்ரீ ராமர் சீதை திருக்கல்யாணம் நடைபெறும் ஆலயங்களில் கலந்து கொள்ளலாம். பிறகு மறுநாள் காலை ராமருக்கு பூஜை செய்து வழிபாடு செய்துவிட்டு ஸ்ரீ ராம நாமம் நிறைவு செய்யலாம்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement